இஸ்ரேல் யுத்தத்தினால் இலங்கைக்கு தொடர் பாதிப்புகள்: உயரும் எண்ணெய் விலை
இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த யுத்தம் இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. இது பொதுவாக வர்த்தக முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.
யுத்தம் தொடரக்கூடாது
அதேபோன்று நாம் தொடர்ச்சியாக மத்திய கிழக்குடன் முன்னெடுத்துச் செல்லும் உறவுகள் ஊடாக சில தெரிவுகளைச் செய்ய வேண்டும். ஒரு போதும் இந்த யுத்தம் தொடரக்கூடாது.

எனவே கூடிய சீக்கிரத்தில் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டு தீர்வுக்குச் செல்ல வேண்டும்.
பாலஸ்தீனர்களுக்கான நாடும், யூதர்களுக்கான நாடும் உருவாக்கப்பட வேண்டும் என 1967ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தத் தீர்வு வரும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் புரிந்து கொண்ட உண்மை. அது விரைவில் நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு