ராஜபக்ச குடும்பம் மீண்டும் சர்ச்சையில்..! லஞ்ச ஆணைக்குழுவில் புதிய முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிவில் செயற்பாட்டாளர் காமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
சுமார் 125 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 1911-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான பங்களா ஆகியவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவை ஒசாட பிளான்டேஷன்ஸ் (Osada Plantations Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சொத்துக்கள் உண்மையில் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவையா, இதற்கான பணத்தின் மூலம் என்ன, மற்றும் பொதுப்பணம் அல்லது சட்டவிரோத பணம் இதில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என்று சிவில் அமைப்பு கோரியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...