அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு...!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சபாநாயகரினால் குறித்த தீர்மானம் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல்
கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை ஆராய்ந்த பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத்தன்மை பற்றிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.