தமிழீழ கோரிக்கையை புறக்கணிக்கும் இந்தியா: இலங்கை அரசை ஆதரிக்கும் சர்வதேசம் (Video)
இலங்கை என்பது ஒரு தனி தீவாக இருக்க வேண்டும் எனவும், அதை தழிழர்களுக்கு பிரித்துக்கொடுப்பதற்கு சர்வதேசம் ஒருபோதும் விருப்பம் காட்டுவதில்லை எனவும் சமூக செயற்பாட்டாளர் செல்வின் சுட்டிக்காட்டினார்.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால தனிநாடு கோரிக்கைக்கு இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசாங்கத்தோடு எவ்வாறு ஒத்துப்போவது, அரசின் நிலைப்பாடுகளை எவ்வாறு ஆதரிப்பது போன்ற செயற்பாடுகளில் சர்வதேசம் கூடிய கவனம் செலுத்துகிறது.
இதன்மூலம் இலங்கை அரசை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை சர்வதேசம் தெளிவாக புரிந்துள்ளது.
இதன் பின்னணியிலேயே இந்தியாவும் இதற்கு முழுமையான ஆதரவை தமிழ் மக்களுக்கு அப்பாற்பட்டு இலங்கை அரசிற்கு வழங்குகிறது.
இதுவே சர்வதேசத்தினதும், இந்தியாவினதும் பூகோள அரசியலாக காணப்படுகிறது.” என்றார்.
ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியாவின் இறுதி முடிவு தொடர்பிலும், சர்வதேசத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam