ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளர்: விசாவை இரத்து செய்த பிரித்தானியா
எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் விசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் காசா மீதான தாக்குதலையும், இஸ்ரேல் - ஹமாஸ் போரையும் நிறுத்த வேண்டும் என பதாகைகளை ஏந்தி பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பேரணிக்கு எகிப்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மொடாஸ் மாதார் (Moataz Matar) ஆதரவு தெரிவித்த நிலையிலேயே அவருடைய வீசாவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரத்து செய்துள்ளது.
இஸ்ரேல் கண்டனம்
மேலும் ஒரு நிகழ்ச்சியில் இவர் இஸ்ரேல் மீதான ஹமாஸின் முதல் தாக்குதலை வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என்று விவரித்திருந்தமை இஸ்ரேலிய ஆதரவாளர்களால் கண்டனத்தையும் பெற்றியிருந்தது.
முன்னதாக, இஸ்ரேலை ஹமாஸ் தாக்கிய சிறிது நேரத்திலேயே யூத-விரோத நடத்தை என்று குற்றம்சாட்டப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உள்துறை குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தங்கள் யூத-விரோத நடத்தை குறித்து எச்சரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அலுவலகத்தால் அவர்களது விசாவை இரத்து செய்யக்கூடிய குறைந்தபட்சம் 6 வெளிநாட்டவர்களின் ஒருவராக மொடாஸ் உள்ளார் என குறித்த ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஜென்ரிக் இதுகுறித்து ஊடகத்திடம் கூறுகையில், ''விசாவின் சிறப்புரிமையை பிழையான முறையில் பயன்படுத்தி செய்து முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயல்களை அங்கீகரிக்கும், வகையில் பிரித்தானியாவுக்கு வருபவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் வழங்கப்படமாட்டாது'' என தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சால் விசா இரத்து செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவராக மொடாஸ் கருதப்படுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |