காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே..! சஜித் கேள்வி

Sajith Premadasa Ministry of Finance Sri Lanka Treasury Cyber Theft
By Rakesh Jun 27, 2026 05:28 PM GMT
Report

நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவிப் பொதுமக்களுக்கும் முறையான நீதி கிடைக்க வேண்டும் என்றும், அண்மையில் மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க டொலர் அரச தவணைப் பணம் குறித்து அரசு நாடாளுமன்றத்துக்கு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(26.06.2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் இந்தியாவில் கைது

லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் இந்தியாவில் கைது

நாட்டின் நிதி நிறுவனக் கட்டமைப்பு

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, "நமது நாடு சர்வதேச ரீதியாகச் செலுத்த வேண்டியிருந்த 25 இலட்சம் அமெரிக்க டொலர் தவணைப் பணம் அண்மையில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. மிகவும் மோசடியான ஒரு நெட்வொர்க் மூலமாக நாடு இந்த பெருமளவிலான நிதியை இழந்துள்ளது.

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே..! சஜித் கேள்வி | Where Is The Missing 2 5 Million Government Funds

இந்த இழப்பின் ஒட்டுமொத்த சுமையையும் நாட்டின் சாதாரண வரி செலுத்துவோரே சுமக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து இதுவரை முறையான தகவல்கள் எதனையும் அரசு நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. இந்த நிதி மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு முறையான மற்றும் வெளிப்படையான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியது தற்போதைய அரசின் தார்மீகக் கடமையாகும்.

அரசு இத்தகைய நிதிக் குற்றங்களை மறைமுகமாக அரங்கேற்றி வருவதைப் போன்றே, நாட்டின் நிதி நிறுவனக் கட்டமைப்புக்குள் இடம்பெறும் திட்டமிட்ட முறைகேடுகள் காரணமாக அப்பாவி வைப்பாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமான சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்ட போது, சுமார் 4 ஆயிரத்து 200 வைப்பாளர்களுக்குப் பாரிய அநீதி இழக்கப்பட்டது.

பின்னர், இரு கட்டங்களாக 5 இலட்சம் மற்றும் 6 இலட்சம் வீதம் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்ட போதிலும், அந்த நிறுவனத்தைக் கலைக்கும் போது வைப்பாளர்களுக்கு மிகவும் சோகமான விதியே நேர்ந்துள்ளது.

தற்போதைய சட்டப்படி, நிறுவனம் கலைக்கப்படும் போது முதலில் கலைப்பாளரின் செலவுகள், இரண்டாவதாக மத்திய வங்கிக்குச் சேர வேண்டிய பணம், மூன்றாவதாக நிறுவனத்தின் ஏனைய கடன்பொறுப்புகள் தீர்க்கப்பட்ட பின்னரே எஞ்சியிருந்தால் வைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

PTAஜ நீக்கினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பி விடுவார்களா..! தவறான பாதையில் அநுர

PTAஜ நீக்கினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பி விடுவார்களா..! தவறான பாதையில் அநுர

அநீதிக்குள்ளான வைப்பாளர்கள்

தற்போதாவது இந்த வைப்பாளர்களுக்கு முதன்மை முன்னுரிமை பெற்றுக் கொடுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை மத்திய வங்கி வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை எனின், அவர்களின் வைப்புத்தொகை மற்றும் வட்டி வருமானத்துக்கு விசேட நிவாரணத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே..! சஜித் கேள்வி | Where Is The Missing 2 5 Million Government Funds

இதேபோன்று, தற்போது 'நேஷன் லங்கா பைனான்ஸ்' நிறுவனத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைப்பாளர்களும் இதேபோன்ற திகைப்பிற்குள்ளாகியுள்ளனர்.

சிங்ஹபுத்ர பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த 2022 இல் கேண்ட்ரிச் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வியப்பூட்டும் விசித்திரம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் அனைத்தினதும் பணிப்பாளர் பதவிகளை ஒரேயொரு குறிப்பிட்ட குழுவினரே வகித்துள்ளனர்.

உறுதிமொழிப் பத்திரங்கள் மூலம் கணக்குகள் பரிமாற்றம் செய்யப்பட்ட போதிலும், 'சிங்ஹ கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட்' எனப்படும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகவரியில் அத்தகைய ஒரு நிறுவனம் நடைமுறையில் இயங்கவே இல்லை.

பொதுமக்கள் வைப்புகளைச் சேகரிப்பதற்கு மத்திய வங்கி தடை விதித்திருந்த காலகட்டத்திலும், இந்த நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் புதிய வைப்புப் பணத்தைச் சேகரித்துள்ளன.

தற்போது இந்த வைப்பாளர்களுக்குப் பணமோ அல்லது அதற்கான வட்டியோ கிடைத்தபாடில்லை. இப்போது இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்தச் சட்ட நடவடிக்கைகள் மிகவும் ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. இது ஒரு திட்டமிட்ட நிதிக் குற்றமாகும்.

நாட்டின் பல்வேறு செல்வாக்குமிக்க அரசியல் மற்றும் வர்த்தகத் தரப்பினர் இதன் பின்னணியில் ஈடுபட்டுள்ளமையால் முறையான விசாரணைகளை நடத்தி அநீதிக்குள்ளான வைப்பாளர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசின் பொறுப்பாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்த நபர்! பலப்படுத்தப்படும் விசாரணை

குடிபோதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்த நபர்! பலப்படுத்தப்படும் விசாரணை

வவுனியா மாநகர மேயர் பதவி நீக்கம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வி.. சபையில் தொடரும் சர்ச்சைகள்

வவுனியா மாநகர மேயர் பதவி நீக்கம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வி.. சபையில் தொடரும் சர்ச்சைகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US