லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் இந்தியாவில் கைது
போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த இலங்கையர் போலி கனேடிய கடவுச்சீட்டு மற்றும் போலியான குடியேற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
சிங்கப்பூர் எயார்லைன்ஸ்
கைது செய்யப்பட்டவர் சின்னப்பு சுபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலங்கையர் கடந்த 23ஆம் திகதியனறு கெம்பேகவுடா விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்திற்கான புறப்பாடு நடைமுறைகளை முடித்துள்ளார்.

எனினும், பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுவதற்குப் பதிலாக, தனது உண்மையான பயணச்சீட்டை மறைத்துள்ளார்.
பிற்பகல் 2 மணியளவில் முனையம் 2 இல் உள்ள புறப்பாடு குடியேற்றப் பிரிவு வழியாக லண்டன் செல்லும் எயார் இந்தியா AI-133 விமானத்தில் ஏற முயன்றமை கண்டறியப்பட்டது.
விசாரணையின் மூலம், சந்தேகநபர் தனது இலங்கை கடவுச்சீட்டை மறைத்து வைத்துவிட்டு, சிவராஜா தக்ஷன் என்ற பெயரிலான போலி கனடா கடவுச்சீட்டை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.