அமெரிக்க நீதியமைச்சரின் தீர்மானத்திற்கு விடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அரசாங்கத் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய நிதியத்தின் எதிர்காலம் குறித்து, புதிய அமெரிக்க நீதியமைச்சர் ரொட் பிளான்ச் தீர்மானிப்பார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாகவும், பிரதி நீதியமைச்சராகவும் கடமையாற்றிய ரொட் பிளான்ச், அமெரிக்காவின் தலைமைச் சட்டத்தரணியாக முறைப்படி பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக $1.776 பில்லியன் பெறுமதியான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
அடுத்தகட்ட நகர்வுகள்
இருப்பினும், அமெரிக்க நீதியமைச்சினால் அந்த உத்தரவு அண்மையில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்தே ரொட் பிளான்ச்சின் நியமனத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தது.

சுமார் 10 பில்லியன் டொலர் பெறுமதியான வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், இது ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்குச் சாதகமான நடவடிக்கை எனப் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த நிதியத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் அதன் எதிர்கால நடைமுறைகள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் முழு அதிகாரமும் நீதியமைச்சர் ரொட் பிளான்ச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன், மகளின் சமீபத்திய புகைப்படங்கள்.. எப்படி வளர்ந்துவிட்டார்கள் என்று பாருங்க Cineulagam