மாளிகாவத்தையில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்
புதிய இணைப்பு
மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் போதைப்பொருள் கும்பல் கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11) பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் பாதாள உலகத்தலைவர் காஞ்சிபானி இம்ரானின் இம்ரானின் தந்தையின் சகோதரரின் மகனான 54 வயதான முகமது அஸ்மி மொஹிதீன் உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மாளிகாவத்தையில் உள்ள சங்கராஜ மாவத்தை பகுதியில் நீண்ட காலமாக இரும்பு வியாபாரம் செய்து வந்தவர் என்றும், இவர் மீது பாதாள உலகக்குற்றங்களில் தொடர்பு இல்லை என்றும் பொலிஸ் கூறுகின்றது.
முதலாம் இணைப்பு
மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாளிகாவத்தை, ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பயணித்த இருவரரால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
விசாரணையில் வெளியான காரணம்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத்தலைவன் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என தெரியவந்திருந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 54 வயதானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாளிகாவத்தை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பிரான்ஸில் வசிப்பதாகக் கருதப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவனான 'குடு அஞ்சு' என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
சிசிடிவி காட்சி வெளியீடு
அண்மையில் இரத்மலானை பகுதியில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய சகா ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கமராவிலும் இந்த துப்பாக்கிச்சூடு பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்தியப் பிரிவுப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.