வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது : சிறீரங்கேஸ்வரன் சவால்

Jaffna S. Sritharan Northern Province of Sri Lanka
By Theepan Jun 11, 2024 02:48 PM GMT
Report

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (11.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காசாவில் மண் கௌவிய நெதனியாகு!! உடைந்தது இஸ்ரேலின் போர் அமைச்சரவை!!

காசாவில் மண் கௌவிய நெதனியாகு!! உடைந்தது இஸ்ரேலின் போர் அமைச்சரவை!!

கூட்டமைப்பின் ஆட்சி

அவர் மேலும் கூறுகையில், சுவிஸ்சர்சலாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற தமிழர் பொருளாதார மாநாடொன்றில் சீன நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடலட்டைப் பண்ணைகள் புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

இது கடற்றொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக வடக்கு கடற்றொழிலாளர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என கூறியுள்ளார்.


ஆனால் வடக்கிலும் மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரம் இருந்த காலப் பகுதியிலேயே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீன நாட்டின் நிறுவனத்திற்கு கடலட்டை குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கான கடலட்டைப் பண்ணையை இவர்கள் வழங்கியிருந்தார்கள்.

பின்னர் கடற்றொழில் அமைச்சராக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பொறுப்பேற்றதன் பின்னர் குறித்த சீன கடலட்டைப் பண்ணை மூடப்பட்டது.

அவ்வாறிருக்கின்றபோது சிவஞானம் சிறீதரன் எவ்வித அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை புலம்பெயர் தேசங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பொய்யுரைத்து வருகின்றார்.

ரஷ்யாவில் இலங்கை இராணுவம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள உறுதி

ரஷ்யாவில் இலங்கை இராணுவம் தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள உறுதி

பொருளாதார மேம்பாடு

வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னிப் பிரதேசத்திலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் வகுக்கின்ற திட்டங்கள் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றுவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத சிறீதரன் பொன்றோர் தமது அரசியல் இருப்புக்களும் கேள்விக் குறியாக இருக்கின்ற சூழலில் இவ்வாறான அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் நம்பியே தமது அரசியலை ஓட்டவேண்டியிருக்கின்றது.

ஆயினும் அவர் வடக்கில் எங்கே எந்த இடத்தில் சீன நிறுவனத்திற்கு கடலட்டைப் பண்ணைகள் உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது : சிறீரங்கேஸ்வரன் சவால் | Where Are China S Coastal Farms In The North

இதைவிடுத்து கடற்றொழில் மக்களின் பொருளாதார பாதிப்புக் குறித்து கவலைப்படாது கவர்ச்சியான அபாண்ட பொய்களை உரைத்து எப்படியாவது மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிடவேண்டும்

கடந்தகாலங்களில் மரண வியாபாரத்தை முன்னெடுத்த அவருக்கு இவ்வாறான பொய்கள்தான் தற்போது தேவையாக இருக்கின்றது என்றும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்: பொலிஸார் செய்த நெகிழ்ச்சி செயல்

கிளிநொச்சியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்: பொலிஸார் செய்த நெகிழ்ச்சி செயல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US