ரணிலின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ள மகிந்த குடும்பம் - பரிதாப நிலையில் ராஜபக்சர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையாலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளமையாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய தலைமைத்துவ நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுதத்தில் ஆரம்பித்து மாதத்திற்கு ஒருமுறை நாடு முழுவதும் பரந்தளவில் மக்கள் கூட்டங்களைத் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
நெருக்கடி நிலை
எனினும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டது அந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மேடையில் இருக்க வேண்டும் என்ற உடன்பாட்டின் அடிப்படையில், மகிந்த ராஜபக்சவை அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்ய கட்சி நடவடிக்கை எடுத்தது.
எனினும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மகிந்தவை வலுக்கட்டாயமாக மேடை ஏற்றுவது தொண்டர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமல் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையாலும், மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை காரணமாகவும், கட்சியின் அடுத்த கூட்டத்தை நடத்தும் இடம், அதன் தலைமை மற்றும் அழைக்கப்படும் கட்சிகள் தொடர்பாக இறுதி செய்யும் பல கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு தரப்பினர் மூலமாக பொதுஜன பெரமுன கட்சிக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கட்சியின் அமைப்புப் பணிகளை இளம் மற்றும் பிரபலமான பிரதித் தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்.
ரணிலின் சூழ்ச்சி
அதற்காக முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு வருட காலத்தில், கஞ்சன விஜேசேகர காட்டிய செயல்திறனே இதற்குக் முக்கிய காரணமாகும்.
பல சந்தர்ப்பங்களில் அவரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டு அதன் தலைமைப் பதவியை வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், அதற்கு நேரடியான பதிலை வழங்காத அவர், சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு தேவை என்று தெரிவித்தார்.
ரணிலின் இந்த அரசியல் நகர்வு குறித்து அறிந்த உடனேயே செயற்பட்ட நாமல் மாத்தறைக்கு சென்று விஜேசேகரவைச் சந்தித்துப் பேசினார்.
நாமலுக்கு பதிலாக கஞ்சன விஜேசேகரவை முன்னிறுத்த ரணில் விக்ரமசிங்க முயன்றதன் பின்னணியில் ஆழமான அரசியல் நோக்கம் மறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தனக்குச் சாதகமான ஒருவரை கட்சியின் உயர் நிலைக்குக் கொண்டு வந்து, அதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையே கூட்டணியை உருவாக்குவதே ரணிலின் பிரதான திட்டமாகும்.
அனுராதபுரப் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்காமைக்கும் இதுவே ஒரு காரணமாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து பல்வேறு அழுத்தங்களை ராஜபக்ச குடும்பம் சந்தித்து வரும் நிலையில், சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுதி, அடுத்த தலைவர் தான் என்பதைக் காட்ட ரணில் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri