பேஸ்புக் மூலம் அறிமுகமான நபருடன் வாழ்ந்த பெண் கொலை! சந்தேகநபர் கைது

Sri Lanka Police Facebook Anuradhapura Sri Lanka Police Investigation Death
By Aanadhi Oct 05, 2026 06:43 AM GMT
Report

இங்கிரிய - ரத்மல்கொட பிரதேசத்தில் வசித்த பேசும் திறன் அற்ற பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு ஆணுடன் வாழ்ந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இங்கிரிய, ரத்மல்கொட பிரதேசத்தில் வசித்த பேசும் திறன் அற்ற பெண்ணொருவர் தனது தாயுடன் அப்பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான அநுராதபுரத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த, பேசும் திறன் அற்ற ஒரு ஆணை தன் வீட்டுக்கு வரவழைத்து தங்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் தயார் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குத் தீர்த்த யாத்திரை சென்றிருந்ததால், வீட்டில் உயிரிழந்தவரும் அவரது நண்பரும் மட்டுமே இருந்துள்ளனர்.

தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதல் 

அதன்போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தங்க வைத்துக் கொண்ட ஆண் நண்பரின் தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆண், அநுராதபுரப் பகுதிக்குச் சென்று தனது பெண் உறவினர் ஒருவரிடம் தாக்குதல் சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபருடன் வாழ்ந்த பெண் கொலை! சந்தேகநபர் கைது | Woman Murdered After Living With Man

அந்தப் பெண் சந்தேக நபரை ஹொரணை பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று பொறுப்பதிகாரியிடம் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரி சந்தேகநபருடன் அந்த வீட்டிற்குச் சென்று கதவைத் திறந்து சோதனையிட்டபோது, ​​ஒரு அறையில் இருந்த படுக்கையில் குறித்த பெண் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.

பிரேத பரிசோதனை

அவர் உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறே இச்சம்பவத்திற்குக் காரணம் என்றும், அப்போது சந்தேகநபர் தடி போன்ற ஒரு பொருளால் உயிரிழந்தவரைத் தாக்கியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அந்த ஆயுதத்தின் உடைந்த துண்டுகள் கிடந்ததும் ஆய்வின்போது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

2027இல் குறையும் வரிகள் : அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதி

ஞானசாரருக்கு இன்றிலிருந்து மீண்டும் 6 வருட சிறை! சற்று முன்னர் வெளியான உத்தரவு

ஞானசாரருக்கு இன்றிலிருந்து மீண்டும் 6 வருட சிறை! சற்று முன்னர் வெளியான உத்தரவு

you may like this video


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US