காட்டிற்குள் ஒளிந்திருந்த ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் மீண்டும் முன்னிலை
தற்போது சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர், இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
விளக்கமறியல்..
அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், அந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடியாணை தொடர்பான விவகாரத்திற்காக, தேரரை அடுத்த புதன்கிழமையன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்வதற்கான பிடியாணை நிலுவையில் இருந்தபோதிலும் தலைமறைவாக இருந்த கலகொட அத்தே ஞானசார தேரரை, களுத்துறை - தீனியாவல பகுதியில் உள்ள ஒரு காட்டு ஆசிரமத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா? News Lankasri