நாமலின் நிலையில் நாளை பௌத்த பிக்குகள்.. எச்சரிக்கும் மொட்டுக் கட்சி
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமை குறித்துப் பேசாமல் இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதி குறித்துப் பேச முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்த ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவரது கூற்றின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குற்றப்பத்திரிகை
நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்க முடியாத வகையில் அவரைச் சிறையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ச குற்றமற்றவர் என்று நான் கூறவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன.

விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை நிரூபித்துக் குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே நீதிமன்ற விசாரணைகள் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், குற்றப்பத்திரிகையோ நீதிமன்ற விசாரணையோ இன்றி அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானது.
இன்று நாமல் ராஜபக்சவுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, நாளை பௌத்த பிக்குகளுக்கோ அல்லது சாதாரண பிரஜைகளின் இளம் பிள்ளைகளுக்கோ இழைக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?
நாட்டின் சட்டத்தையும் பிரஜைகளின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan