குறைந்த வருமானம் பெறுவோருக்கான 5000 வீடுகள் நாளை கையளிப்பு
குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10,000 வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 5,000 வீடுகள் நாளை (05) உத்தியோகபூர்வமாக மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகள் அனைத்தும் முழுமையாக அரச நிதி மற்றும் பொருளாதார உதவிகளின் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வீட்டுத் திட்டம்
சொந்தமாக ஓரிடம் - அழகானதொரு வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் உலக வாழ்விட தினத்திற்கு இணையாக இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் இந்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் டீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri