இந்தியா - தென் ஆபிரிக்கா இடையேயான தீர்மானமிக்க இறுதிப் போட்டி இன்று
எதிர்பார்ப்பு மிக்க டி20 உலகக்கிண்ண தொடரில் முன்னாள் செம்பியனான இந்தியாவை, வரலாற்று வெற்றியுடன் இறுதிப்போட்டியில் கால்தடம் பதித்திருக்கும் தென்னாப்பிரிகா அணி எதிர்த்தாடவுள்ளது.
மேற்கிந்திய தீவுகளின் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருட டி20 உலகக் கிண்ணப் போட்டியில் குழுநிலையிலும் சுப்பர் 8 இலும் தோல்வி அடையாத அணிகளாக இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் முன்னிலைப்பெறுகின்றன.
டி20 தொடர்
இந்த தொடரில் இரண்டு அணிகளின் வீரர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தாலும் சகலதுறை வீரர்களின் பங்களிப்பானது. வரவேற்கத்தக்கதாக அமைந்திருந்தது.
ஐசிசி உலகக்கிண்ண டி20 தொடரானது இம்முறையை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றது. 20 அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று இடம்பெற்றது.
இதில் முதல் சுற்றிலேயே எதிர்பார்க்கப்பட்ட முன்னணி அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட அணிகளும் உகாண்டா, பப்புவா நியூகினி ஸ்காட்லாந்து நெதர்லாந்து, நேபாளம், கனடா, ஐயர்லாந்து, ஓமான், நம்பிபியாஆகிய அணிகள் வெளியேறின.
இதில் அடுத்த சுற்றுக்கு தனது முதல் கன்னித்தொடரில் போட்டியிட்ட அமெரிக்கா உள்நுழைந்தமையானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்க ஆகிய அணிகள் உள்நுழைந்தன.
இந்தியா - தென்னாபிரிக்கா
உலகக்கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றானது சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருந்தது. கடுமையான போட்டிக்கு மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களின் விளையாட்டானது கிரிக்கெட் ரசிகர்களை அதன் பக்கம் ஈர்த்திருந்தது.
இந்த தொடரில் 8 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகவும் ஒரு முக்கிய சுற்றாக 2ஆவது சுற்று அமைந்திருந்தது.
2ஆவது சுற்றில் சுவாரஷ்யம் மிக்க போட்டியாக அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்த்தான் போட்டி அமைந்திருந்தது. நாட்டில் சொந்த மைதானம் கூட இல்லாத அணியான ஆப்கானிஸ்த்தான் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதிக்கு தகுதிபெறும் இரண்டாவது சுற்றில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்க, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேற ஏனைய அணிகள் வெளியேறி நாட்டுக்கு திரும்பியிருந்தன.
அதன் பின்னர் தென்னாபிரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மக்ரம் தலைமையிலான தென்னாபிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு இது அந்த அணிக்கு வரலாற்று வெற்றியாகவும் அமைந்திருந்தது.
மற்றுமொரு அரையிறுதி
அதன் பின்னர் இடம்பெற்ற மற்றுமொரு அரையிறுதி போட்டியில் நடப்ப செம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கான வழியை அமைத்துக்கொண்டது.
இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற முதல் ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண அத்தியாயத்தில் வென்றெடுத்த கிண்ணத்தை 17 வருடங்களின் பின்னர் மீண்டும் சுவீகரிக்க இந்தியா முயற்சிக்கவுள்ளது.
அதேவேளை, அங்குரார்ப்பண அத்தியாயத்தை 2007இல் உலகக்கிண்ணத்தை நடத்திய தென் ஆபிரிக்கா 17 வருடங்கள் கழித்து உலக சம்பியன் பட்டத்தை வென்றெடுக்கும் நோக்கத்துடன் விளையாடவுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா சார்பாக ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா விளையாடவுள்ளனர்.
மேலும், தென் ஆபிரிக்கா சார்பாக குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), டேவிட் மில்லர், ஹென்றிச் க்ளாசன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, அன்றிச் நோக்கியா, தப்ரெய்ஸ் ஷம்சி விளையாடவுள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |