இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
புதிய இணைப்பு
நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
இதேவேளைஇங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 23 ஓட்டங்களையும் ஹரி ப்ருக் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் நாளையதினம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன.
மூன்றாம் இணைப்பு
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, அரைசதம் அடித்த நிலையில், 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஜடேஜா 17 ரன்களுடனும், அர்ஸ்தீப் சிங் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 172 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்ட இங்கிலாந்து அணி தற்போது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
மழையால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது துடுப்பாட்டம் செய்யும் இந்திய அணி 14.4 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி கயானாவில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தற்போது இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக விராட்கோலி 9 பந்துகளில் 9 ஓட்டங்களையும் ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.
கோப்பையை சுவிகரிக்கும் முயற்சியில் இரு அணிகள்
உலகக் கிண்ண அங்குரார்ப்பண வரலாற்றில் எம். எஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா, 17 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரிக்கும் முனைப்புடன் இம்முறை களம் இறங்கியுள்ளது.
மறுமுனையில் 2010இலும் 2022இலும் உலக சம்பியனான இங்கிலாந்து, மூன்றாவது முறையாகவும் கோப்பையை சுவிகரிக்கும் பாதையில் களமிறங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |