17 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா
17 வருட ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
அதேவேளை, உலகக் கிண்ண அரை இறுதிகளில் 7 தடவைகள் தோல்வி அடைந்ததன் காரணமாக துரதிர்ஷ்ட அணி என்ற முத்திரை தென் ஆபிரிக்காவுக்கு குத்தப்பட்டிருந்தது.
தற்போது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
அரையிறுதிப் போட்டி
இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிப்பெற்று இந்த தகுதியை பெற்றுள்ளது.
Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களையே பெற்றது.
வெற்றி இலக்கு
அந்த அணி சார்பில் அனைத்து வீரர்களும் 10 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் மார்கோ ஜேன்சன் (Marco Jansen) மற்றும் தப்ரைஸ் ஷம்சி (Tabraiz Shamsi) தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 8.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் (Reeza Hendricks) 29 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஐடன் மார்க்ராம் (Aiden Markram) 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |