இலங்கை கிரிக்கெட் அணியில் பிரகாசிக்கும் மற்றுமொரு தமிழ் வீரர்

Sheron
in கிரிக்கெட்Report this article
தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இளம் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் சுற்றுப்போட்டியின் முதலாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சிறப்பான துடுப்பாட்டம்
இதில் சாருஜன் சண்முகநாதன் 75 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சிறப்பான ஒரு துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை அணி சார்பில் மஹித் பெரெரா 58 ஓட்டங்களையும் தினுரு அபேவிக்ரமசிங்க 37 பந்துகளில் 52 ஓட்டங்களையும் அணித்தலைவரான தினுர கலுப்பஹன 59 பந்துகளில் 49 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
18 வயது நிரம்பிய சாருஜன் சண்முகநாதன் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
