பாகிஸ்தானில் இலங்கையர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உறவினர்கள் வெளியிட்ட தகவல்
பாகிஸ்தான் – சியல்கொட் தொழிற்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் கொலைக்கான காரணத்தை உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தொழிற்சாலையில் இனவாத குழுவொன்றினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாக கொலை செய்யப்பட்டவரின் சகோதரனான கமலசிறி ஷாந்தகுமார தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே தனது சகோதரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது கணவரின் கொலைக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு அவரது மனைவி நிரோஷி தசநாயக்க கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மிகவும் ஒழுக்கமானவர் எனவும், கடின உழைப்பாளி என அவருடன் நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்....
பாகிஸ்தானில் இலங்கையர் ஏன் கொல்லப்பட்டார்? வெளியாகியுள்ள தகவல்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : இலங்கைக்கு கொண்டு வரப்படும் சடலம்
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam