கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பணம் செலுத்தியதாக மேல் மாகாண ஆளுநர் மீது குற்றச்சாட்டு
கொழும்பின் காலி முகத்திடல் மற்றும் டூப்ளிகேசன் சாலையில் கிறிஸ்துமஸ் வெளிச்ச விளக்கு காட்சிகளுக்கு மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப் பணம் செலுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வைத்து குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய(21.01.2025) அமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
காலி முகத்திடலில் கிறிஸ்துமஸுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதோடு ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் ஒரு இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவற்றுக்கு ஏன் ஹனிஃப் யூசூப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு சில காட்சிகளைக் காட்ட ஹனிஃப் யூசூப்பிற்கு ஏதேனும் நோக்கம் இருக்க வேண்டும் எனவும் சாமர தசநாயக்க கூறியுள்ளார்.
அபத்தமான செயல்
அத்துடன், ஆளுநர்கள் அப்படிச் செலவு செய்ததாக தாம கேள்விப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு யார் பணம் செலுத்தினார்கள் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
அத்துடன், மேல் மாகாண ஆளுநர் இந்த நாட்டின் புகழ்பெற்ற ஒருவர். ஆனால் அவர் அரசாங்கத்துடன் வணிகம் செய்ய நியமிக்கப்படவில்லை. இது அனைத்து அரசியல் கட்சிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும் என்று பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இந்தநிலையில், சபையில் இல்லாத யூசூப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது அபத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri