நாட்டின் பல பகுதிகளில் இன்று மீண்டும் மழைக்கான சாத்தியம்..
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தற்போது படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருகின்றது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மக்கள் அவதானம்
நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான, மிதமான அல்லது பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இதன்மூலம் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri