இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பகுதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் இன்று மாரவில, நாரம்மல மாவத்தகம, கிராந்துருகோட்டே மற்றும் மண்டூர் ஆகியவை இடங்களில் சூரியன் இன்று மதியம் 12.09 மணியளவில் நேரடி உச்சம் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
