நாட்டில் சீரற்ற காலநிலை: பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதால் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, இன்று (16) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழையினால் திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காக சகல மாவட்டங்களிலும் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
துரித அழைப்பு இலக்கம்
அனர்த்த நிலைமைகள் தொடர்பான விடயங்களை, 24 மணி நேரமும் இயங்கும் 117 என்ற துரித அழைப்பு இலக்கத்துக்கு மும்மொழிகளிலும் அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தற்போது எவ்விதமான அனர்த்தங்களும் பதிவாகவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் போது, அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
