எட்டு மாதங்களுக்குள் தலைகீழாக மாறிய அநுர அரசின் நிலை..
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் வாக்காளர் தளமான தேசிய மக்கள் சக்தி இயக்கம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில(Uthaya Gammanbila) தெரிவித்துள்ளார்.
கோட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் தனது முதல் நியமனமான ஜனாதிபதியின் செயலாளரை நியமித்த தருணத்திலிருந்தே தவறான பாதையில் செல்லத் தொடங்கியது.
முன்னைக்கப்பட்ட விமர்சனங்கள்
அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு வாரம் முடிவதற்கு முன்பே, அரசாங்கத்தின் மூன்றாவது நியமனமான பொதுப் பாதுகாப்புச் செயலாளரின் நியமனம் குறித்து நாங்கள் விமர்சனங்களை எழுப்பினோம்.

தவறான நடவடிக்கை எடுக்கும் ஒவ்வொரு முறையும் தாம் அதைச் சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாட்டையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஊழல் செய்ய அனுமதிக்க முடியாது.
அரசாங்கம் பணிவாக இருந்தால், அவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசாங்கம் ஆணவமாக இருந்தால், தவறுகளைப் பாதுகாப்பதன் மூலம் அரசாங்கத்தை அழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam