ஈரான் மீது மீண்டும் சரமாரி தாக்குதல்கள்.. அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்!
ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
At 3 p.m. ET, U.S. forces launched operations for a second wave of strikes today against Iran. The strikes are targeting Iranian military capabilities used to threaten vessels freely transiting through the Strait of Hormuz, an international waterway vital to global commerce. The…
— U.S. Central Command (@CENTCOM) July 15, 2026
அதன்படி, "சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் பயன்படுத்தி வரும் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் இலக்குகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.