காலி சிறைச்சாலைக்குள் மர்ம நபர்கள் வீசிய பொதி! தீவிர விசாரணையில் பொலிஸார்
காலி சிறைச்சாலையின் பின்புறம் உள்ள தொடருந்து நிலையப் பகுதி அருகிலிருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசி எறிந்து தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து, பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி காலி தலைமையக பொலிசார் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்த இரண்டு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி, பொலிஸ் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்
மேலதிக விசாரணை
அதில், 2,180 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், புகையிலை மற்றும் 49 லைட்டர்களைக் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் அடங்கிய அந்தப் பொதி, சிறைக் கைதிகளைக் குறிவைத்து சிறை சுவர்களைத் துளைத்து கடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தலைமறைவான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, காலி தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam