கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மீது திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர்..! விரைவில் கைது செய்யப்படவுள்ள பிள்ளையான்
ஏர்பஸ் விசாரணை
இரண்டாவது சந்தேகநபருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில மொழியில் திறந்த பிடியாணை உத்தரவை வழங்குமாறு சிஐடி கோரிய நிலையில் இதனை நீதவான் அங்கீகரித்தார்.

அதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர், பிரியங்கா நியோமாலிக்காக பிணையாட்களாக நின்றிருந்த நிலையில், வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர்களுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார்.
மேலும், ரூ.10 மில்லியன் பிணைத் தொகை பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவுகளை ஆராய்ந்த நீதவான், செலுத்தப்பட்டிருந்த பிணைத் தொகை ரூ.10 மில்லியன் அல்ல, ரூ.20 மில்லியன் என சுட்டிக்காட்டினார்.
மீண்டும் விசாரணை
மேலும், அந்தப் பிணைத் தொகையை பறிமுதல் செய்வதற்கு முன் அதற்கான காரணங்கள் எழுத்துமூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்படி, இரு பிணையாளர்களையும் அவர்களது பொறுப்பிலிருந்து விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், பிணைத் தொகையை பறிமுதல் செய்வதற்கான காரணங்களை எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு ஜூலை 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam