கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்! விஜித ஹேரத் கடும் எதிர்ப்பு

Sri Lanka Canada
By Rakesh May 17, 2025 10:15 PM GMT
Report

வாக்கு வேட்டைக்காகவே கனடா, பிரம்டன் மேயரால் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழியை அவர் நிறைவேற்றியுள்ளார்" என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"பிரம்டன் பகுதியில் தமிழின அழிப்பு தொடர்பான நினைவகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை 2021 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளது.

அநுர அரசுக்கு நெருக்கடியாகும் புலனாய்வு அறிக்கை

அநுர அரசுக்கு நெருக்கடியாகும் புலனாய்வு அறிக்கை

கனடா வெளிவிவகார அமைச்சர்

இதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது ஆட்சியிலும் இது விடயத்தில் மீண்டும் தலையிட்டோம். தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தோம்.

கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்! விஜித ஹேரத் கடும் எதிர்ப்பு | Tamil Genocide Memorial In Canada

எனினும், அந்நாட்டு சட்டத்தின் பிரகாரமே அதனை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழின அழிப்பு வாரத்துக்கு எதிராக தடை உத்தரவு பெறுவதற்குக் கனடாவிலுள்ள அமைப்பொன்று நீதிமன்றத்தை நாடியிருந்தாலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நினைவகம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழை. 2021 ஆம் ஆண்டில் இருந்தே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பிரம்டன் மேயர் வாக்கு வேட்டைக்காகவே இந்தச் செயலைச் செய்துள்ளார். அப்பகுதியில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்” என்றார்.

வலி. வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து மனு கையளிப்பு

வலி. வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து மனு கையளிப்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US