வலி. வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து மனு கையளிப்பு
வலி. வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்கக்கோரி பொதுமக்களால் வடக்கு ஆளுநரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (17.05.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வலி. வடக்கு வள நிலையம் எனும் பொது அமைப்பினூடாக வலி. வடக்கின் மயிலிட்டி, பலாலி, தையிட்டி உள்ளடங்கலாக காணப்படும் விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்குமாறு கோரி பிரதேச மக்களால் குறித்த மனு கையளிக்கப்பட்டது.
முழுமையான விடுவிப்பு
நீண்ட காலமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் செய்வதற்கும் தமது இருப்பிற்குமான சொந்த நிலங்கள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக இன்னமும் விடுவிக்கப்படாமையை ஆளுநரிடம் எடுத்துக்கூறியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதில் வழங்கிய வடக்கு மாகாண ஆளுநர் தற்போதுள்ள ஜனாதிபதியின் காலத்தில் காணிகள் அனைத்தும் படிப்படியாக விடுவிக்கப்படும் என குறிப்பிட்டதாக காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



