நாட்டில் அதிகரித்துள்ள சிவில் சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்குக்கும் செயற்பாடுகள்
இந்த தேசத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய இழப்பையும் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினுடைய மீள்ச்சியையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் செயல்படுவதே தமது நோக்கம் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செயல்படுகின்ற எங்களைப் போன்ற சிவில் சமூக செயல்பாட்டாளர்களை நசுக்கி ஒடுக்குவதன் மூலமாக தமிழர்களின் தீர்வு சார்ந்த விடயங்களில் இவர்கள் மக்களின் குரல்களை நசுக்க பார்க்கின்றார்கள் என்கின்ற ஒரு உண்மை முகம் வெளிப்படுகின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மையில் தாக்குதலுக்குள்ளானமை தொடர்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை அவர் நடாத்தியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கடந்த 14-ம் திகதி குடும்பி மலை நோக்கி பயணம் செய்தபோது சிங்கள மொழியிலும் கொச்சைத் தமிழிலும் பேசிய நபர்களால் நான் தாக்குதலுக்கு உள்ளானேன்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பித்த 12-ஆம் திகதி முதலாவது நாள் சத்துருக்கொண்டான் படுகொலையின் நினைவு தூபிக்கு அருகில் நாங்கள் ஆரம்பித்திருந்தோம்.
அப்போது அங்கு வருகை தந்திருந்த புலனாய்வு பிரிவை சேர்ந்து ஒருவர் எமது நிகழ்வுகளை அவர் பதிவு செய்த நேரத்தில் அவரோடு நான் தர்க்கத்தில் ஈடுபட்டேன்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
