நெருக்கடியை தீவிரப்படுத்தும் வெப்பத்தின் கோரமுகம்: மக்களின் வாழ்வாதாரம் மீது விழும் அடுத்த அடி

Sri Lanka Northern Province of Sri Lanka Weather
By Benat Sep 05, 2023 11:46 AM GMT
Report

இலங்கை என்று கூறும் போது, இயற்கை வளங்கள் பலவும் நிறைந்த நாடாகவே முதலில் அடையாளப்படுத்தப்படும்.

சமுத்திரம், நிலம், பாறைகள், மண், கனியங்கள், நீர், காடுகள் என்ற அனைத்து வளங்களும் நிரம்பி வழியும் நாடாகவே இலங்கை காணப்படுகின்றது.

அதேசமயம், இலங்கையின் அமைவிடமானது பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுக்கக் கூடியதாகவே அமைந்திருப்பதாக புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்


பாதிக்கப்படும் வாழ்வியல்

அதிலும், கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதுடன் இவற்றில் காலநிலை மாற்றம் பாரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது.

இந்த இயற்கை அனர்த்தங்களால், காலநிலை மாற்றங்களால் எற்படும் விளைவுகள் பொருளாதாரத்திலும், மக்களது வாழ்வியலிலும் கூட தாக்கம் செலுத்துபவையாகவே அமைகின்றன.

குறிப்பாக, விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதிலும், வறட்சியினால் ஏற்படும் பாதிப்புக்கள் மிக அதிகமானவை.

நெருக்கடியை தீவிரப்படுத்தும் வெப்பத்தின் கோரமுகம்: மக்களின் வாழ்வாதாரம் மீது விழும் அடுத்த அடி | Weather Alert Sri Lanka

வறட்சியின் கோரத் தாண்டவம்

வறட்சி என்பது ஒரு பிரதேசத்தில் இயல்பை விட குறைவான மழைவீழ்ச்சியை அனுபவிக்கும் காலமாகும். போதிய மழைப்பொழிவு, அல்லது பனி இல்லாமை, மண்ணின் ஈரப்பதம் அல்லது நிலத்தடி நீர் குறைதல், நீரோடை ஓட்டம் குறைதல், பயிர் சேதம் மற்றும் பொதுவான நீர் பற்றாக்குறை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதனால், விவசாய நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்

அடைமழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு: காரணம் வெளியிட்ட அதிகாரிகள்

அவ்வாறான ஒரு இக்கட்டான நிலையையே தற்போது, வடக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். சொல்லப் போனால் வடக்கில் வறட்சி கோரத் தாண்டவம் ஆடுகின்றது.

குளங்கள் வறட்சியால் வற்றிப்போய், மீன்கள் செத்துப் போக தொழில்களை இழந்து மக்களை வறுமை வாட்டத் தொடங்கி விட்டது. வாழும் பயிர்களில் விளைச்சல் குறைந்து வருமானம் குறைகிறது.

குளங்கள் வறண்டு போவதால் அவற்றுக்கருகில் உள்ள நிலத்தில் நிலத்தடி நீரும் கீழிறங்கிச் செல்லுகிறது. மண்ணில் ஆழ வேர் ஊடுருவி நீர் பெறும் தாவரங்களில் விளைச்சல் வெகுவாக குறைந்து வருகின்றது. வாழை போன்ற ஆண்டுத் தாவரங்கள் பாதிக்கப்பட்டுப் போவதோடு சிறுதானியப் பயிர்ச்செய்கையும் பாதிக்கப்படுகிறது.

நெருக்கடியை தீவிரப்படுத்தும் வெப்பத்தின் கோரமுகம்: மக்களின் வாழ்வாதாரம் மீது விழும் அடுத்த அடி | Weather Alert Sri Lanka

பெரும் அவல நிலை

வடக்கிலங்கையில் நீரினை மூலமாக கொண்ட தொழில்முறை வாழ்வே பிரதானமாக இருக்கும் போது குளங்கள் நீரிழப்புக்குள்ளாகி வருவது பெரும் அவல நிலையை ஏற்படுத்தி வருகிறது.

சிறுதானியப் பயிர்களின் பயிர்ச்செய்கை முற்றாக முடங்கிப் போகிறது. நீர்நிலைகளில் மீன் பிடித்தல், தாமரைப் பூ மற்றும் இலைகளை பெற்று விற்கும் ஒரு பகுதி மக்கள் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை வாழ்வதாரத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்களது வாழ்வியலும் முடங்கிப் போகும் நிலைக்குச் சென்றுள்ளது.

நெருக்கடியை தீவிரப்படுத்தும் வெப்பத்தின் கோரமுகம்: மக்களின் வாழ்வாதாரம் மீது விழும் அடுத்த அடி | Weather Alert Sri Lanka

கால்நடைகளுக்கான குடிநீரைப் பெறுவதும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிறுபோகம் முடிவடைந்து பெரும் போகத்திற்கான நிலப் பண்படுத்தல்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உரிய காலத்தில் பெரும் போகத்திற்கான மழைவீழ்ச்சி போதியளவில் கிடைக்காது போகும் போது நிலைமை பெரும் அவலத்தை ஏற்படுத்திப் போகும். குளங்களின் புணரமைப்புக்காக பல குளங்களின் நீரை தேக்காது திறந்து விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இடையிடையே வடக்கில் பல இடங்களில் சிறியளவிலான மழைவீழ்ச்சி பதிவாகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் இது பயிர் விளைச்சலுக்கு போதுமானதாக இல்லை.

வன்முறையில் எரிந்து போன புத்தகங்கள்: நாடாளுமன்ற உறுப்பினரின் மகளது பரீட்சை பெறுபேறுகள்

வன்முறையில் எரிந்து போன புத்தகங்கள்: நாடாளுமன்ற உறுப்பினரின் மகளது பரீட்சை பெறுபேறுகள்

குடிநீருக்கும் அவதியுறும் நிலை

ஏற்கனவே, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ளூர் உற்பத்திகள் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போதைய வறட்சி நிலை ஏற்கனவே உள்ள இக்கட்டான நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

நெருக்கடியை தீவிரப்படுத்தும் வெப்பத்தின் கோரமுகம்: மக்களின் வாழ்வாதாரம் மீது விழும் அடுத்த அடி | Weather Alert Sri Lanka

கடந்த வாரம் வரையில், நாட்டில் நிலவிய வறட்சியின் காரணமாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய மாவட்டங்களையும் சேர்த்து இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 70,408 நபர்களைக் கொண்ட 22,044 குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் பல பிரதேசங்களில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு குடிநீருக்கும் அவதியுறும் நிலையை இந்த வறட்சி ஏற்படுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US