காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை தற்போதைய மழையுடனான காலநிலை இன்று (03) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கை
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100க்கு மி.மீக்கு மேல் பலத்த மழையும் பெய்யும் எனவும் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மி.மீ. 50க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
