நாட்டில் அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மீண்டும் மாற்றம்
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
துகள் உறைபனி
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
