முன்னாள் பொலிஸ் மாஅதிபரின் தோட்டத்தில் இருந்து ஆயுதம் மீட்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றில் இருந்தே முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பிரிவினர் பயன்படுத்தும் மினி ஊஷி ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
குறிப்பாக இந்தத் துப்பாக்கி விசேட அதிரடிப்படையினர், கமாண்டோக்கள், விசேட படைப்பிரிவு (எஸ்.எப்) போன்ற உயர்பயிற்சிகள் பெற்ற படைப் பிரிவினர் பயன்படுத்தும் ஆயுதமாகும்.
விக்டர் பெரேராவுக்கு சொந்தமான வரகாகொட பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
