தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் : சுசில் பிரேமஜயந்த சூளுரை

A D Susil Premajayantha Government Of Sri Lanka Election
By Rakesh Feb 25, 2024 10:56 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன உரிய நேரத்தில் நடத்தப்படும். குறித்த தேர்தல்களின் எமது புதிய கூட்டணி வெற்றி வாகை சூடும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்  என புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்டத்திற்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று (24.02.2024) ஹைட் பார்க் மைதானத்தில் நடை பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "கடந்த ஜனவரி மாதம் ஜா - எலயில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை விட பன்மடங்கு மக்கள் தொகையுடன் இன்று கொழும்பில் எமது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை

400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை

இளம் தலைமுறையை ஆதரிக்கும்  கூட்டணி

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட மட்டக்களப்பின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் என்னுடன் இணைத்துள்ளனர். மேலும் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணையத் தயாராகவுள்ளனர். தற்போது சில அரசியல் கட்சிகள் தமக்குப் போட்டியாக அரசியலில் வேறு எந்தப் பலமும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றன. அந்த எண்ணம் தவறானதாகும்.

தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் : சுசில் பிரேமஜயந்த சூளுரை | We Will Win The Election Susil

அவ்வாறு எண்ணும் கட்சிகளுக்குச் சவாலாக எமது புதிய கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கின்றோம். எமது கூட்டணி இளம் தலைமுறையினரின் நிலைப்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் இடமளிக்கும் கூட்டணியாக அமைந்துள்ளது.

வெற்றிக்கான கூட்டணியை அமைப்பதற்குப் பல ஆண்டுகள் தேவையில்லை. ஆறு மாத காலத்துக்குள் வெற்றியை நோக்கிய பயணத்தை இலக்காகக் கொண்டு எமது கூட்டணி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது என்பதை சகலரும் அறிவார்கள்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம்: மத்திய வங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரம்: மத்திய வங்கி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

இலங்கையின் ஜனநாயகம்

அன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை சில அரசியல் சக்திகள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தன. அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் கைப்பற்றப்பட்டன.அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் : சுசில் பிரேமஜயந்த சூளுரை | We Will Win The Election Susil

எனினும், அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. இல்லை என்றால் இன்று ஜனநாயகம் கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கும்.

2009ஆம் ஆண்டு பிரபாகரனின் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், அதன் பின்னர் பொருளாதார யுத்தம் ஆரம்பித்தது. அந்த யுத்தம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே, எமது புதிய கூட்டணியின் இலக்கு பொருளாதார யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியடைச் செய்வதாகும்.

நானுஓயாவில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

நானுஓயாவில் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

 மக்களின் எதிர்பார்ப்பு

2022ஆம் ஆண்டு மே மாதம் நான் எனது அமைச்சைப் பொறுப்பேற்கும் போது பாடசாலை புத்தகங்களையோ சீருடைகளையோ வழங்க முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால், இன்று முதலாம் தவணை ஆரம்பித்த உடனே எம்மால் பாட புத்தகங்களை விநியோகிக்க முடிந்துள்ளதோடு சீருடைகளையும் வழங்க முடிந்துள்ளது.

தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் : சுசில் பிரேமஜயந்த சூளுரை | We Will Win The Election Susil

தற்போது தொழில் இன்றி உள்ள புதிய பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கத் தயாராகவுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக ஏமாந்தது போதும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். எனவே, மக்கள் மாற்றத்தையும் புதுமையையும் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எமது புதிய கூட்டணி செயட்படும்.

ஜனாதிபதித் தேர்தல்

அதற்கமைய, எமது அடுத்த கூட்டம் இதனை விட பன்மடங்கு மக்கள் தொகையுடன் முன்னெடுக்கப்படும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் எம்முடன் இணையத் தயாராகவுள்ளனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசப்படுகின்றது. அரசமைப்புக்கு அமைய ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் : சுசில் பிரேமஜயந்த சூளுரை | We Will Win The Election Susil

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த இரு தேர்தல்களும் குறிப்பிட்ட தினத்தில் இடம்பெறும். குறித்த உத்தேச தேர்தல்களில் எமது புதிய கூட்டணி பாரிய வெற்றி பெறும் என நம்புகின்றோம்.

அந்த வெற்றிப் பயணத்துக்கான நடவடிக்கைகளையே நாம் இன்று ஆரம்பித்துள்ளோம். கற்பனைக் கதைகளால் மாத்திரம் எதையும் செய்துவிட முடியாது. எனவே, வார்த்தைகளால் மாத்திரமின்றி செயற்பாடுகளாலும் நாம் எமது வெற்றியை நிரூபித்துக் காட்டுவோம்." என குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது

ஐரோப்பா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கட்டுநாயக்கவில் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US