இலங்கையிடம் இழப்பீடு பெற்றே தீருவோம்:சீன நிறுவனம்
இலங்கை அமைச்சரவையில் தமது நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலர்களை இணங்கினாலும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் நஷ்டத்திற்காக இலங்கையிடம் கட்டாயம் இழப்பீடு பெற்றே தீர்வோம் என சீனாவின் சேதனப் பசளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மத்தியஸ்த நீதிமன்றத்தின் ஊடாக இலங்கையிடம் கட்டாயம் இழப்பீடு பெறப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இலங்கையின் நிறுவனங்கள் வேண்டும் என்றே மேற்கொண்ட செயல் காரணமாக தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் ஷீவின் பயோடெக் (Seawin biotech) நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் ஹெனா சோங்க் (Hena Chong) தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் நேற்று இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு சேதனப் பசளையை வழங்கும் கேள்வி மனுக்கு அமைய தாம் 100 வீதம் நேர்மையான விலையை வழங்கியதாகவும் சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த சேதனப் பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கிய இருப்பதாக கூறி, இலங்கை அந்த பசளை தொகையை ஏற்க மறுத்தது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam