அநுர அரசை நம்பி ஏமாந்துவிட்டோம்! எமது காணிகளை மீட்டுத் தாருங்கள் என்று சுமந்திரனிடம் பலாலி மக்கள் வேண்டுகோள்

M A Sumanthiran National People's Power - NPP NPP Government
By Rakesh Jul 06, 2026 08:27 AM GMT
Report

எங்கள் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்து, அவரது அரசை நம்பி நாங்கள் முற்றாக ஏமாந்து போயுள்ளோம் என்று எம்.ஏ.சுமந்திரனிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, எங்களது சொந்த நிலங்களை எங்களிடமே மீட்டுத் தாருங்கள்" என்று வலிகாமம் வடக்கு, பலாலி பகுதி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சென்று சந்தித்தபோதே மக்கள் இந்த ஆதங்கத்தை வெளியிட்டனர்.

மைதானத்தில் கதறி அழுது கண்ணீருடன் விடைபெற்றார் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்..!

மைதானத்தில் கதறி அழுது கண்ணீருடன் விடைபெற்றார் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர்..!

தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர்கள்

அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

 "எமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

இவ்வாறான நிலைமையில், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்து அவரது ஆட்சி அமைந்தால் எமது காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பெருமளவில் ஆதரவையும் வழங்கியிருந்தோம்.

அநுர அரசை நம்பி ஏமாந்துவிட்டோம்! எமது காணிகளை மீட்டுத் தாருங்கள் என்று சுமந்திரனிடம் பலாலி மக்கள் வேண்டுகோள் | We Were Deceived By Trusting The Anura Government

நாங்கள் எதிர்பார்த்தது போன்றே அவரது தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர்களும் எங்களது காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறி வந்தனர். ஆனால், இன்றுவரை எமது காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து நீடிக்கின்றன.

இப்படியாக அநுரகுமாரவை நம்பி நாங்கள் ஏமாந்து போயுள்ளோம்.

இளைஞர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டு! ஹிருணிக்காவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

இளைஞர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டு! ஹிருணிக்காவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

கொட்டகை அமைத்துப் போராட்டம் 

கடந்த காலங்களில் எங்களது வீதியால் நடந்து திரிந்த ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எங்களது காணிகளில் இப்போதும் இராணுவம் இருப்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அதனை எங்களிடம் வழங்க ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்றார்? இன்றைக்கு எங்கள் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, அமைதியான முறையில் போராட்டத்தில் கூட ஈடுபட முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

அநுர அரசை நம்பி ஏமாந்துவிட்டோம்! எமது காணிகளை மீட்டுத் தாருங்கள் என்று சுமந்திரனிடம் பலாலி மக்கள் வேண்டுகோள் | We Were Deceived By Trusting The Anura Government

வயதானவர்கள், பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் இணைந்து கொளுத்தும் வெயிலில் போராட வந்திருக்கிற போது, எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தற்காலிகக் கொட்டகை (பந்தல்) கூட அமைப்பதற்குப் பொலிஸார் அராஜகமாகத் தடுக்கின்றனர். அதுவும், 'இங்கு வடக்கில் நீங்கள் கொட்டகை அமைத்துப் போராட்டம் செய்தால், தெற்கில் விமல் வீரவங்ச போன்றவர்கள் கொட்டகை அமைத்துப் போராட்டம் செய்வார்கள்' எனப் பொலிஸார் அப்பட்டமாகக் கூறுகின்றனர்.

அப்படியானால் இந்த அரசாங்கம் எதைப் பற்றிச் சிந்திக்கிறது? பேரினவாதத்திற்கு அஞ்சியே எமது உரிமைகளை அரசு மறுக்கின்றது. ஆக, கடந்த கால அரசுகள் மட்டுமல்ல, அநுரவின் இந்த அரசையும் நம்பி நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். எமது காணிகளில் இப்போது கூடப் படையினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 25 பேர் பலி - காயங்களுடன் பலர் சிறைக்குள்: தீவிரமடையும் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 25 பேர் பலி - காயங்களுடன் பலர் சிறைக்குள்: தீவிரமடையும் துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்கள்

பலாலி மக்கள் 

அத்துடன், அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கவும் இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிகின்றோம். எனவே, எமது காணிகளில் இருந்து படையினர் உடனடியாக வெளியேறி, எமது நிலங்கள் எங்களிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் காணிகள் மீட்கப்படும் வரை இப்போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றனர்.

அநுர அரசை நம்பி ஏமாந்துவிட்டோம்! எமது காணிகளை மீட்டுத் தாருங்கள் என்று சுமந்திரனிடம் பலாலி மக்கள் வேண்டுகோள் | We Were Deceived By Trusting The Anura Government

இதன்போது மக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மக்களின் பூர்வீகக் காணிகள் நிபந்தனையின்றி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதையே நாமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்" என்றார்.

அத்துடன், இந்தத் தன்னிச்சையான காணி ஆக்கிரமிப்புக்கள் மற்றும் சுவீகரிப்பு முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், அந்த வழக்குகளின் தற்போதைய முன்னேற்ற நிலவரங்கள் குறித்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US