எங்களுக்கு உலகளாவிய பொறுப்பு உள்ளது : பிரமித்த பண்டார தென்னகோன்
நாட்டிற்குள் இயற்கை மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு முகங்கொடுக்க சரியான திட்டத்தை வைத்திருப்பது மிகவும் அவசியமானது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் விசேட திறன்கள் மற்றும் தயார்நிலைகளை அவதானிப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) மத்தேகொடவில் உள்ள இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணிக்கு அவர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், நிகழும் பேரழிவுகளை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கு உதவுவதற்கான திறனை நாம் உருவாக்குவது அவசியமாகும் எனவும் வஅர் தெரிவித்துள்ளார்.
கண்காட்சி
இதன்போது, கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள இரசாயன, உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிபொருட்கள் அகற்றல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமைத்துவ கருவி மற்றும் உபகரணங்களை அமைச்சர் தென்னகோன் பார்வையிட்டுள்ளார்.
இதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய செயல்விளக்கங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிகுண்டுகளை அகற்றுதல், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் திறன்கள் மற்றும் இராணுவப் பொறியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பான விரிவான விளக்கக்காட்சியும் இதன்போது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |