அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யும் முயற்சியை கைவிடவில்லை! அரசாங்கம் திட்டவட்டம்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யும் முயற்சிகளை கைவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் கைது
அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரையும் மாற்றிக் கொண்டு சிங்கப்பூர் பிரஜையாக வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதில் அந்நாட்டு சட்டங்கள் தடை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு தேவையான மூலோபாயங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேடப்பட்டு வரும் நபராக அர்ஜூன் மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளதனை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.



