நாம் விக்னேஸ்வரனை போல கொள்கை மாற்றுபவர்கள் அல்ல : சாணக்கியன்
நாம் விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அண்மையில் விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் கொள்கை மாற்றுபவர்கள் இல்லை. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதிவரை செயற்படும்.
தேர்தல் அரசியல்
இதேவேளை, தமிழ் தரப்புக்களுக்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க, மார்ச் மாதம் தீர்வு திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார்.
இவ்வாறான நிலையில், பல ஏமாற்றங்கள் இருந்தாலும் நாம் சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றோம். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகின்றது.
ரணில் விக்கிரமசிங்க, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக மட்டகளப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றது” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 51 நிமிடங்கள் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
