மதுபான விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மதுபானங்களின் விலை ஜனவரியில் இருந்து 90 முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படும் என மது உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஜனவரி முதலாம் திகதி முதல் வெற் வரி 18 சதவீதம் உயர்த்தப்படுவதால் மதுபான நிறுவனங்கள் மதுபானங்களின் விலையை 150 ரூபாயாக உயர்த்தவுள்ளன.
எத்தனோல், வெற்று மதுபான போத்தல்கள், மதுபான போத்தல் ஒட்டிகள், மூடிகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானம் அடங்கிய போத்தல்கள் மீதான வெற் வரி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு தடவைகள் அதிகரிப்பு
இதன்படி, 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் 375 மில்லி லீட்டர் மற்றும் 180 மில்லி லீட்டர் மதுபானத்தின் விலை முறையே ரூ.50 மற்றும் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மதுபானங்கள் மீதான மதுவரி இந்த வருடம் இரண்டு தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |