இலங்கையில் கடுமையாகும் கட்டுப்பாடு : மீறுவோருக்கு 50000 ரூபா தண்டப்பணம்
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து இலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரச விதிமுறைகளை மீறி பதிவு செய்யாதோருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துனர்
அதேவேளை வருடாந்தம் 12 இலட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும்.
பதிவு எண்ணைப் பெறுவதும் வரிக் கோப்புகளைத் திறப்பதும் தனித்துவமான செயல்முறைகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் இருக்கும் போது, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பதிவு எண் கட்டாயமாகும்.
தனிநபர்கள் வரிவிதிப்புக்கு பொறுப்பேற்க போதுமான வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்துவதற்கான கோப்பைத் திறப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
