காவலுக்கு சென்ற சமுர்த்தி முகாமையாளருக்கு நேர்ந்த சோகம்
மட்டக்களப்பில், வாகரை பிரதேச வயல் பிரதேசம் ஒன்றில் சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் காட்டு யானைக்காவல் பரணில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வாகரைப் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி முகாமையாளராகக் கடமை புரியும் இராமலிங்கம் காளிராசா (வயது 47) எனும் 5 பிள்ளைகளின் தந்தை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர், வழமையாக வயல் காவலுக்குச் செல்பவர் என்றும், கடந்த புதன்கிழமை வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மகன் தந்தையை தேடிச்சென்ற நிலையில் பரணடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ரமேஸ் ஆனந்தன் பிரேத பரிசோதனை நடத்தியுள்ளார்.

அதனடிப்படையில், பரணில் இருந்து நிலத்தில் விழுந்ததில் தலையில் பலமான அடிபட்டு மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (29.12.2023) அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri