1990 க்கு பின்னர் வந்த ஜனாதிபதிகளே பிரச்சினைகளுக்கான பொறுப்பாளிகள்!
நாடு தனிமையானது
உள்நோக்கிய கொள்கைகள காரணமாகவே இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய இக்கட்டான நிலைக்கு 1990 களின் நடுப்பகுதியில் இருந்து நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகளின் தொலைநோக்கு பார்வைகள் மற்றும் முடிவுகளே காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னர், 1993ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரே பதவியில் இருந்து வந்தனர்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பல ஜனாதிபதிகள் எடுத்த தவறான தீர்மானங்களே தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.

உள்நோக்கிய கொள்கை
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளன. எனினும் உள்நோக்கிய கொள்கைகளால் இலங்கை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகள் கூட தற்போது இலங்கைக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இதேவேளை இந்த வருட இறுதி வரை, தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் போராடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை தயாரிக்க தயார் - ஹர்ஷ டி சில்வா
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan