11 மாணவர்கள் கடத்தல் வழக்கு! வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
11 மாணவர்கள் கடத்தல் சம்பந்தமான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த உத்தரவானது நேற்றையதினம் (15) உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி
உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் விஜயரட்ண ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில் நேற்றையதினம்(15) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.
குறித்த மனுவின் அடிப்படையில், சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமன்ன மற்றும் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் முன்லையாகி தனது வாதத்தினை முன்வைத்த போது நீதியரசர் குழாம் இவ்வாதத்தின் தன்மையில் திருப்தியடைந்து இந்த வழக்கினை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
குறித்த உயர்நீதிமன்ற முறையீட்டு மனுவில் முக்கிய பிரதிவாதிகளாக வசந்தகுமார ஜெயதேவா கருணாகொட மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பெயர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் இந்த வழக்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
