உலகை அச்சுறுத்தும் சூப்பர் எல் நினோ! 4,50,000 பேர் உயிரிழக்கக்கூடும் - வெளியான எச்சரிக்கை..
நடப்பு ஆண்டில் நிலவும் சக்திவாய்ந்த “சூப்பர் எல் நினோ” காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகளவில் தீவிர வெப்பம் அதிகரித்து, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் (பெப்ரவரி 2027) சுமார் 4,51,000 கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
க்ளைமேட் இம்பாக்ட் லேப் (Climate Impact Lab) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பான வெப்பநிலை
இந்த ஆண்டு ஜூன் முதல் 2027 பெப்ரவரி வரையிலான காலத்தில், இயல்பான ஆண்டுகளை விட 4,51,000 அதிகமான வெப்பம் சார்ந்த உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளது.
இந்த காலப்பகுதியில் வழக்கமான ஆண்டுகளை விட உலகளவில் அதிக வெப்பம் நிலவும் நாட்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது இந்த ஆண்டின் எல் நினோ தாக்கமானது, இன்னும் சில தசாப்தங்களில் உலகம் எதிர்கொள்ளப் போகும் இயல்பான வெப்பநிலையின் “முன்னோட்டம்” (Postcard from the future) என ஆராய்ச்சியாளர்கள் விபரித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 0.5°C அதிகரிக்கும் போது 'எல் நினோ' உருவாகிறது.
மிகக் கடுமையான பாதிப்பு
கடல் வெப்பநிலை 2°C அல்லது அதற்கு மேல் உயரும் போது அது "சூப்பர் எல் நினோ" என வகைப்படுத்தப்படுகிறது.
நடப்பு ஆண்டில் இது 2.7°C வரை உயர்ந்துள்ளதுடன், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 4°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் தெற்குலக நாடுகளே (Global South) இதனால் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்திக்கவுள்ளன இந்த நிலையில், உயிரிழப்புகளைக் குறைக்க முடிவெடுப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என அறிக்கை பரிந்துரைக்கிறது.
தீவிர வெப்ப எச்சரிக்கைகளை (Heat Warnings) முன்னதாகவே வெளியிடுதல். வைத்தியசாலைகளில் ஊழியர்கள் மற்றும் அவசர சிகிச்ச வசதிகளை அதிகரித்தல். பொதுமக்கள் தஞ்சம் அடைய குளிரூட்டும் மையங்களை (Cooling Centres) அமைத்தல். திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் - என்பனவே அந்த பரிந்துரைகளாகும்.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri