வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பொதிகள்
வெளிநாட்டிலிருந்து தனியார் கூரியர் சேவை மூலம் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்த 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இவை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 19ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
போதைப்பொருள் தொகுதி
சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பில் இருந்த பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகுதியை, மேல் மாகாண வடக்கு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்க அதிகாரிகளின் உதவியுடன் நேற்று முன்தினம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 3 கிலோகிராம் 599 கிராம் குஷ் மற்றும் 2 கிலோகிராம் 409 கிராம் ஹஷிஷ் ஆகியவை அடங்கும்.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam