முக்கிய சூத்திரதாரி தொடர்பில் சாட்சியமளிக்க தயார்..! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் நேற்று முன் தினம் (22) குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆறாவது பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் (அபு தாரிக்) நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உண்மையாக பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாகவும், நீதியை நிலைநாட்டுவதற்கு உதவ வாய்ப்பு அளிக்கப்பட்டால் சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் அடையாளம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு 200 வருடங்களுக்கும் அதிக கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு நேற்று முன் தினம் (22) வழங்கப்பட்டுள்ளது.

நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அத்துடன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பு வாக்குமூலம்
இதன்போது தண்டனை விதிக்கப்பட்ட மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் (அபு தாரிக்) தனது வாக்குமூலத்தில்..,
தானும் தனது குடும்பத்தினரும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வலியுறுத்திய அதே வேளையில், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

குறித்த விசாரணை ஆரம்பத்திலிருந்தே ரிஸ்கான் நீதிமன்றத்தில் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யாத நிலையில், தனக்கான சட்டத்தரணியையும் நியமிக்கப்படவில்லை. தண்டனைத் தீர்ப்புக்கு முன், தனது தண்டனை குறைப்பு மனுவை தாக்கல் செய்த போதே அவர் நீதிமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு என் குடும்பம் எந்த தீங்கும் செய்யவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பது அல்லாஹ்வுக்கு தெரியும். ஏதோ ஒன்று நடந்தது, நாங்கள் அதில் சிக்கிக்கொண்டோம். நெருப்பில்லாமல் புகையாது. இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் இன்னும் வெளியே தங்கள் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியே இருந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், இந்த சுமையை தங்கள் தலைக்கு மேல் சுமந்துகொண்டு வாழ்கிறார்கள். நீதியை நிலைநாட்ட எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நான் நீதிக்காக பேசுவேன். நாங்கள் செய்யாத ஒரு செயலுக்காக ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்? ஒரு தவறு நடந்திருக்கிறது, ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை.
குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு விசாரணையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. என் மனைவி புற்றுநோயால் அவதிப்படுகிறார். என் தாய்க்கு 75 வயது. என் சகோதரி தனது சாதாரண தர கல்வியை முடித்துவிட்டார். ஆனால் நான் அந்த விடயங்களைப் பற்றி நினைப்பதில்லை. நான் முற்றிலும் நிம்மதியாக இருக்கிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உண்மையாக பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாகவும், நீதியை நிலைநாட்டுவதற்கு உதவ வாய்ப்பு அளிக்கப்பட்டால் சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri