நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு - 4:30PM(Sl Time)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு லஞ்சம் வழங்கியதாக கைது செய்யப்பட்ட கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு - 3:22PM(Sl Time)
கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணியாளரும் தொழிலதிபருமான ஜானகி சிறிவர்தன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுமத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மூன்று முறை 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுமத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
70 மில்லியன் ரூபா இலஞ்சம்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று காலை (24) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்காக, கொழும்பு கோட்டையில் உள்ள நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமான ஒரு சொத்தைப் பெற்றுத் தருவதற்கும், தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்துவதற்கும் உதவியதற்காக, நாமல் ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நான் ஈழத் தமிழ் பெண்..! சமூகவலைத்தளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றைவார்த்தை
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri